பரமக்குடி அருகே கூட்டுறவு வங்கியில் ரு.1.47 லட்சம் நூதன மோசடி: விவசாயிகள் அதிர்ச்சி

பரமக்குடி அருகே கூட்டுறவு வங்கியில் ரு.1.47 லட்சம் நூதன மோசடி: விவசாயிகள் அதிர்ச்சி
X

பரமக்குடி அருகே கூட்டுறவு வங்கியில் ஒரு கோடியே 47லட்சம் ரூபாய் நூதன மோசடி.

கூட்டுறவு வங்கியில் தங்க முலாம் பூசப்பட்ட நகைகளை வைத்து ஒரு கோடியே 47லட்சம் ரூபாய் நூதன மோசடி. விவசாயிகள் அதிர்ச்சி.

பரமக்குடி அருகே கூட்டுறவு வங்கியில் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை வைத்து ஒரு கோடியே 47லட்சம் ரூபாய் நூதன மோசடி. விவசாயிகள் அதிர்ச்சி.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் ஒன்றியம் பி.கொடிக்குளம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் கிளை அலுவலகம் அருகே உள்ள கிளியூரில் செயல்பட்டு வருகிறது. கடந்த கால ஆட்சியில் விவசாயிகளுக்கு தங்க நகை கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த தகவலை அடுத்து, ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்திற்கும் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கிளியூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது அடகு வைத்த நகைகளை ஒவ்வொன்றாக சோதனை செய்து வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ள பாக்கெட்டுகளை ஆய்வு செய்து உரசிப் பார்த்த போது தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை வைத்துள்ளது தெரியவந்தது. அதன் பின் சங்கத்தில் உள்ள அனைத்து நகைகளையும் ஒவ்வொன்றாக தொடர்ந்து சோதனை மேற்கொண்டதில் சுமார் 74 பாக்கெட்டில் வைத்துள்ளது தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த 74 பாக்கெட்டுகளில் உள்ள நகைகளுக்கு கொடுக்கப்பட்ட தொகையின் மதிப்பு சுமார் 1 கோடியே 47 லட்சம் ரூபாய் ஆகும். இதனால் உடனடியாக ஆய்வு செய்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எண்: 406 பி. கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் இதேபோன்ற மோசடிகள் நடைபெற்றுள்ளதா என்று அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் நகைகளை அடகு வைத்துள்ள விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த வங்கிகளில் தங்க நகைகளை வைத்துள்ள விவசாயிகள் வந்து தங்களது நகை உள்ளதா என்பதை ஆய்வு செய்து வந்த வண்ணம் உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!