பரமக்குடியில் கனிமொழி பிரச்சாரம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முருகேசனை ஆதரித்து திராவிட முன்னேற்ற கழக மகளிரணி செயலாளர் கனிமொழி இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். பரமக்குடி தொகுதிக்குட்பட்ட எமனேஸ்வரம் பகுதியில் திறந்த வேனில் முருகேசனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில்: மத்தியிலுள்ள பிஜேபி ஆட்சிக்கு பினாமியாக செயல்படும் தமிழக ஆட்சியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும். ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும். நீட் தேர்வு, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டம் என மோடி, அமித்ஷா எதை சொன்னாலும் தமிழகத்தில் செயல்படுத்துகின்றன.
தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகதான் பிஜேபியுடன் கூட்டணி வைத்து உள்ளேன் என முதல்வர் பழனிசாமி கூறி வருகிறார். ஆனால் தமிழகத்தில் ஜிஎஸ்டி நிலுவை தொகை 15 ஆயிரம் கோடியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை புயல் நிவாரணமாக தமிழக அரசு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கேட்டது. மத்திய அரசு தமிழகத்திற்கு அள்ளிக் கொடுக்க வேண்டாம், ஆனால் கில்லி கூட கொடுக்கவில்லை, புயல் நிவாரணமாக வெறும் 5000 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு கொடுத்தது, பிரதமர் மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஆந்திராவில் 752 கோடி, உத்தரபிரதேசத்தில் 702 கோடி என மத்திய அரசு ஒதுக்கிய நிலையில் தமிழகத்திற்கு 12 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியது. இதனை தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒரு இட்லி ஒரு கோடி ரூபாய் என கணக்கு கூறியதுபோல் தமிழக அரசு 12 கோடி ரூபாய்க்கு நான்கு செங்கல்களை வாங்கியுள்ளது. பொய் கணக்கு எழுதி ஊழலில் மட்டுமே வெற்றி நடை போடும் தமிழகமாக மாற்றி வைத்துள்ளனர் என பேசினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu