பரமக்குடி அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ சதன் பிரபாகர் மீண்டும் போட்டியிடுகிறார். இன்று அவர் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியிலிருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று தேர்தல் நடத்தும் அதிகாரி தங்கவேலிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் கழக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விருப்ப மனு தாக்கல் செய்த பின்பு தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu