அதிமுக வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு !

அதிமுக வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு !
X

பரமக்குடியில் அதிமுக வேட்பாளர்களுக்கு மாவட்ட எல்லையில் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் முதுகுளத்தூர், பரமக்குடி மற்றும் திருவாடானை ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கடந்த 10ம் தேதி அதிமுக தலைமை அறிவிப்பு செய்தது. இதனையடுத்து வேட்பாளர் அறிவிப்புக்கு பின் வேட்பாளர்கள் சொந்த ஊருக்கு வரும் வழியில் அதிமுக தொண்டர்கள் அவர்களை வரவேற்க மாவட்ட எல்லையில் பார்த்திபனூர் என்னும் இடத்தில் அதிமுக தொண்டர்களும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் சிறப்பான வரவேற்பை தந்தனர். கவும் உற்சாகமாக காணப்பட்டது.அது போல் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கீர்த்திகா முனியசாமிக்கும், பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரனுக்கும் மற்றும் திருவாடானை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆணிமுத்துவையும் அதிமுக தலைமை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

வரவேற்பு குறித்து முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி கூறுகையில், கடந்த தேர்தலில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த நான் இந்த முறை எம்எல்ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டால் தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்துவேன். தற்போது எம்எல்ஏ.,வாக உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாண்டியன், அவரது எம்எல்ஏ., அலுவலகத்தை திறப்பது கூட இல்லை. ஆனால் நான் 24 மணி நேரமும் பொதுமக்களை சந்தித்து குறைகளை களைவேன் என்றார். மேலும் அவர் கூறுகையில், இன்று இந்த எழுச்சியான வரவேற்பை கண்டதும் வெற்றியை எட்டி விட்டோம் என்று தோன்றுகிறது என்று கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!