பள்ளி மாணவர்களிடையே மோதல் -மண்டை உடைப்பு

பள்ளி மாணவர்களிடையே மோதல் -மண்டை உடைப்பு
X
பரமக்குடி தனியார் பள்ளி மாணவர்களிடையே மோதல் மண்டை உடைப்பு, மாணவர்களை விரட்டியடித்த போலீசார்.

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி தமிழகம் முழுவதும் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை நேரத்தில் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளியில் பள்ளி முடிவடையும் போது, பள்ளி மாணவர்களிடையே சாலையில் மோதல் ஏற்பட்டது. மோதலில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்நிலையில் பரமக்குடி பேருந்து நிலையம் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் 10-ற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக சேர்ந்து கள்ளியேந்தல் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் அருண்குமாரை சரமாரியாக மாணவர்கள் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மாணவர் இருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பரமக்குடி நகர் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மோதலில் ஈடுபட்டிருந்த மாணவர்களை பார்த்ததும் லத்தியை வைத்து விரட்டி அடித்து கலைத்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மாணவர் அருண்குமாரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கே மருத்துவர்கள் தலையில் பலத்த காயமடைந்த மாணவனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் எதற்காக மோதலில் ஈடுபட்டார்கள் என்ன காரணம் என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!