தண்ணீர் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு,முதல்வர் உறுதி

தண்ணீர் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு,முதல்வர் உறுதி
X

தண்ணீர் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பார்த்திபனூர் பகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 11 ஏழை குடும்பங்களுக்கு கறவை மாடுகள் வழங்கினார். தொடர்ந்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது,தமிழக அரசு விவசாயத்திற்கு தான் முன்னுரிமை அளித்து வருகிறது.அனைத்து ஏரி, குளம் கால்வாய்களை தூர்வாரி விவசாயிகளுக்கு கோடை காலத்தில் தேவையான நீரை தற்போதே தேக்கி வைத்திருக்கிறோம். காவேரி குண்டாறு இணைப்பிற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. காய்கனிகள் அதிகமாக விளையும் மாவட்டங்களில் அதை பாதுகாப்பாக வைக்கும் குளிரூட்டப்பட்ட அறை அமைக்கப்படும்.

அதில் அதிகப்படியான காய்கனிகள் உற்பத்தி ஆகும் போது இந்த அறையில் வைத்து விட்டு தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 75000 கோடி ரூபாய் முதலீட்டில் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!