/* */

அதிமுக வேட்பாளருக்கு மலர்தூவி வரவேற்பு

கமுதி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளருக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்.

HIGHLIGHTS

அதிமுக வேட்பாளருக்கு மலர்தூவி வரவேற்பு
X

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இணைந்து கமுதி பகுதியில் உள்ள கிராமங்களில் மக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கமுதி அருகே உள்ள நந்தி சேரிப் பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் கீர்த்திகா முனியசாமிக்கு அப்பகுதி பெண்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர். செல்லும் இடங்களிலெல்லாம் ஆரத்தி எடுத்தும் வெற்றித் திலகமிட்டும் பெண்கள் வரவேற்றனர். மேலும் கமுதி பகுதியில் பழுவூர், பூதத்தான். நெடுங்குளம், நந்திசேரி, சம்பக்குளம், முத்தாலங்குளம், நாராயணபுரம்,கல்லுப்பட்டி, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிக்க வருகை தந்த வேட்பாளர் கீர்த்தி முனிசாமிக்கு மலர் தூவி, மாலை அணிவித்தும், சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பினை பொதுமக்கள் அளித்தனர். தன்னை வரவேற்ற பொதுமக்களுக்கு வேட்பாளர் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் அதிமுக கூட்டணி கட்சியின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து கூறியும் துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தன்னை வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் தன்னை முதுகுளத்தூர் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தால் பொதுமக்களுக்கு தேவையான அனைத்துவித தேவைகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்வேன் எனவும் மக்களுக்கு தேவையான அனைத்து வித அரசு திட்டங்களையும் எவ்வித தடையுமின்றி தொகுதி மக்களுக்கு முழுமையாக பெற்றுத் தருவேன் என வாக்குறுதி அளித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுகவின் தேர்தல் அறிக்கைகளை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்து தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டார்.

Updated On: 24 March 2021 4:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  4. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  5. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  8. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  9. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...