அம்மா கிளினிக் முடக்கப்பட்டதை எதிர்த்து கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அம்மா கிளினிக் முடக்கப்பட்டதை எதிர்த்து கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
X

அம்மா கிளினிக் முடக்கப்பட்டதை எதிர்த்து வாலாந்தரவை மற்றும் கும்பரம் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அம்மா கிளினிக் முடக்கப்பட்டதை எதிர்த்து வாலாந்தரவை மற்றும் கும்பரம் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாலாந்தரவை, கும்பரம் ஊராட்சியில் கடந்த ஆண்டு முதல் இயங்கி வந்த அம்மாவின் கிளினிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, திடீரென திமுக அரசு முடக்கியதை கண்டித்து,கிராம பெண்களும் பொதுமக்களும் கிளினிக் முன்பாக நின்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா மினி கிளினிக் என்ற திட்டத்தை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ஆனால் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் திமுக அரசு மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை முடக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் ராமநாதபுரம் மாவட்டம் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் அம்மா கிளினிக்குகள் மூடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாலாந்தரவை, மற்றும் கும்பரம் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் என ஏராளமானோர் மூடப்பட்டுக் கிடக்கும் அம்மா கிளினிக் எனக்கு முன்பாக நின்று மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும், கிராமப்புறங்களில் நாங்கள் மிகவும் பயன்பட்டு வந்த இந்தத் திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு முடக்கியதை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பினர்.

அம்மா கிளினிக் திட்டத்தை மூடுவதன் மூலம் திமுக அரசு பொது மக்களிடையே கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டம் வறட்சி பகுதியான மாவட்டம். இங்கு கிராமப்புறங்கள் நிறைந்து அதிகம் காணப்படுவதால் நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல முடியாத கிராம மக்கள் கிராமங்களில் இயங்கி வந்த அம்மா கிளினிக்குகள் மூலம் மிகவும் பயனடைந்து வந்தனர். எனவே இத்திட்டம் இந்த கிளினிக்குகள் மூடப்படுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!