கமுதி அருகே போலீசாரிடம் ரகளை செய்த வாலிபர் கைது

கமுதி அருகே போலீசாரிடம் ரகளை செய்த வாலிபர் கைது
X

கமுதி அருகே போலீசாரிடம் ரகளை செய்த இளைஞர்.

கமுதி அருகே கஞ்சா பொட்டலம், கத்தியுடன் போலீசாரிடம் ரகளை செய்த வாலிபர்கள் கைது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மண்டலமணிக்கம் காவல் நிலைய போலீசார் சின்ன உடப்பங்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த சுடுகாட்டு பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த இளைஞர்களை போலீசார் பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் வாள் மற்றும் கஞ்சா இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து இளைஞர்களை பிடித்து மண்டலமணிக்கம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சண்முகவேல் விசாரிக்கும் போது அவரிடம் என் பாக்கெட்டில் நீங்கள் கஞ்சா எடுத்தீர்களா, கத்தி வைத்திருந்தால் கைது செய்வீர்களா, நான் யாரையும் குத்தவில்லையே, உங்களை சும்மா விடமாட்டேன் என்று போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டது.

அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து ரகளையில் ஈடுபட்ட சின்ன உடப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த மனோஜ் குமார்( 22), வினோத்( 17) ஆகிய இருவரையும் மண்டலமணிக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!