முதுகுளத்தூர் அருகே கனமழைக்கு இரண்டு வீடுகள் இடிந்து விழுந்து சேதம்

முதுகுளத்தூர் அருகே கனமழைக்கு இரண்டு வீடுகள் இடிந்து விழுந்து சேதம்
X

முதுகுளத்தூர் அருகே உள்ள அப்பனேந்தல் கிராமத்தில் கனமழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.

முதுகுளத்தூர் அருகே கனமழைக்கு இரண்டு வீடுகள் இடிந்து சேதம். நிவாரணம் வழங்க கோரிக்கை.

முதுகுளத்தூர் அருகே கனமழைக்கு இரண்டு வீடுகள் இடிந்து விழுந்து சேதம். நிவாரணம் வழங்க கோரிக்கை.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக முதுகுளத்தூர் அருகே உள்ள அப்பனேந்தல் கிராமத்தில் பார்வதி மற்றும் செல்வி என்பவருக்கு சொந்தமான இரண்டு வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.

இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. சாத்தனூர் ஊராட்சி மன்றத் தலைவர் அழகம்மாள் மழையினால் இடிந்து சேதமடைந்த வீட்டினை பார்வையிட்டு, வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில் வீடு இடிந்தவர்கள் அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு