முதுகுளத்தூரில் புதிய மோட்டார் வாகன அலுவலகம் கட்டும் இடத்தை பார்வையிட்ட அமைச்சர்

முதுகுளத்தூரில் புதிய மோட்டார் வாகன அலுவலகம் கட்டும் இடத்தை பார்வையிட்ட அமைச்சர்
X

முதுகுளத்தூரில் புதிய மோட்டார் வாகன அலுவலகம் கட்டும் பணிக்கான இடத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பார்வையிட்டார்.

முதுகுளத்தூரில் புதிய மோட்டார் வாகன அலுவலகம் கட்டும் பணிக்கான இடத்தை பிற்படுத்தப்பட்டோர்நலத்துறை அமைச்சர் பார்வையிட்டார்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் ஏற்பாட்டில் முதுகுளத்தூரில் புதிய மோட்டார் வாகன அலுவலகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

தற்போது வாடகை கட்டடத்தில் இயங்க உள்ள இடம், மற்றும் புதிதாக கட்டப்பட உள்ள இடம் குறித்து அதிகாரிகள் உடன் பார்வையிட்டார். அதேபோல் கமுதி முத்துராமலிங்க தேவர் நினைவு கல்லூரியில் இதுவரை மாணவிகளுக்கான தங்கும் விடுதி இல்லாத காரணத்தினால் மாணவிகளுக்கான புதிய தங்கும்விடுதி கட்டுவதற்கான இடத்தையும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

Tags

Next Story