10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோவில் கைது

10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோவில் கைது
X

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் ஆரோக்கிய அருள் தாமஸ்

முதுகுளத்தூர் அருகே தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள திருவரங்கம் கிராமத்தில் அரசு உதவி பெறும் திரு இருதய மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி 53 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 800க்கும் மேற்பட்ட கிராமப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக 10 வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதே பள்ளியில் பட்டதாரி கணித ஆசிரியராக பணியாற்றி வரும் வாணி கிராமத்தை சேர்ந்த ஆரோக்கிய அருள் தாமஸ் என்பவர் பத்தாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார். நடவடிக்கை எடுக்கவேண்டிய தலைமையாசிரியர் அருளானந்த், தவறு செய்த கணித ஆசிரியர் ஆரோக்கிய அருள்தாமசை கண்டித்து நடவடிக்கை எடுக்காமல் விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த மாணவி குழந்தைகள் பாதுகாப்பு நல துறைக்கு தகவல் அனுப்பியுள்ளார். இதன் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் நேரடியாக விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில் ஆரோக்கிய அருள் தாமஸ் அதே பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்களும் மாணவிகளிடம் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததாக தெரிய வந்தது. விசாரணை நடத்தி வரும் சூழ்நிலையில் ஆரோக்கியஅருள் தாமஸ் தலைமறைவானார்.

இந்நிலையில் தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!