பட்டா கோரிக்கைகளுக்கு தீர்வு காண நாளை சிறப்பு முகாம்: அமைச்சர்கள் பங்கேற்பு

பட்டா கோரிக்கைகளுக்கு தீர்வு காண நாளை சிறப்பு முகாம்: அமைச்சர்கள் பங்கேற்பு
X

மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத்

பட்டா தொடர்பான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் நாளை சிறப்பு முகாம் தொடக்கம். அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர்.

பட்டா தொடர்பான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் நாளை சிறப்பு முகாம் தொடக்கம். அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர்.

இராமநாதபுரம்; மாவட்டத்தில், அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு சேர்க்கும் நோக்கில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும்; வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரதி வாரம் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் அனைத்து வருவாய் வட்டங்களிலும் நடைபெறவுள்ளது. மேற்படி சிறப்பு முகாம் இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை கமுதி வட்டம், முடிமன்னார் கோட்டை வருவாய் கிராம், கீழமுடிமன்னார் கோட்டை உட்கடை கிராமத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்; ஆகியோரால் துவக்கி வைக்கப்பட உள்ளது. மேற்படி சிறப்பு முகாமில் பொதுமக்கள் பட்டா தொடர்பான கீழக்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் கொடுத்து பயன்பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அ) புல எண் / உட்பிரிவுகள் தவறாகப் பதிவு திருத்தம்.

ஆ) விஸ்தீரணப் பிழை திருத்தம்.

இ) பட்டாதாரரின் பெயர் தந்தை / காப்பாளர் பெயரில் பிழை திருத்தம்.

ஈ) உறவு முறையில் பிழை திருத்தம்.

உ) காலியாக உள்ளது.

ஊ) பட்டாதாரரின் பெயர் / விஸ்தீரணம் அடுத்த பட்டாதாரருடன் மாறுபாடு

எ) பிற கோரிக்கை மனுக்கள் அதாவது முதியோர் ஓய்வூதியம், வீட்டு மனைப்பட்டா ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்துதல், சான்றிதழ்கள், குடிநீர், சாலை வசதிகள் போன்றவவை.

மேற்படி சிறப்பு முகாம் நாளை கமுதி வட்டம் முடிமன்னார் கோட்டை வருவாய் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக அனைத்து வட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களில் நடைபெறும் (அரசு பொது விடுமுறை தவிர). கொரோனா மூன்றாம் அலை பரவல் தடுக்கும் பொருட்டு மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் தெரிவித்தள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்