சாயல்குடி அருகே பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 2 மாணவர்கள் படுகாயம்
X
சேதமடைந்த பள்ளி மேற்கூரை.
By - Saral, Reporter |1 March 2022 12:45 PM IST
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே, வாகைக்குளம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், 42 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று காலை, பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்குச் சென்று, வழக்கம் போல் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.
அப்போது, மேற்கூரை இடிந்து விழுந்ததில், நான்காம் வகுப்பு பயிலும் மாணவி வைஷ்ணவி மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர் அகிலேஷ் ஆகியோருக்கு, தலையில் பலத்த காயமடைந்த நிலையில் அங்கிருந்து அருகில் உள்ள சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu