சாயல்குடி கடற்கரை: ரோந்து சென்ற போலீசை பயங்கர ஆயுதங்களால் தாக்கிய நபர்கள்..!

சாயல்குடி கடற்கரை: ரோந்து சென்ற போலீசை பயங்கர ஆயுதங்களால் தாக்கிய நபர்கள்..!
X

பைல் படம்.

சாயல்குடி கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்ற தனிப்பிரிவு காவலர்களை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்கோட்டத்த்தில் குற்ற தடுப்பு பிரிவில் பணிபுரிந்து வரும் தனிப்பிரிவு காவலர் வசந்த். இவர் லிங்கநாதன் என்ற சக காவலருடன் சாயல்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, நரிப்பையூர் கடற்கரையில் கடத்தல் சம்பந்தமாக கிடைத்த தகவலை அடுத்து அந்த பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நபர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தது தெரியவந்துள்ளது. ஆனால் காவலர்களிடம் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், காவல்துறை மற்றும் ரோந்து சென்ற இரண்டு காவலர்களையும் ஆபாசமாக பேசி தரக்குறைவாக நடந்து கொண்டதுடன், கையில் வைத்திருந்த அபாயகரமான ஆயுதங்களால் தாக்கியதில் காவலர் வசந்துக்கு கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் உடனிருந்த காவலர் லிங்கநாதனுக்கு கையில் காயம் ஏற்பட்டு இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சாயல்குடி காவல் நிலையத்தில் நரிப்பையூரை சேர்ந்த அப்துல் ரசீது, மற்றும் ஒப்பிலானை சேர்ந்த முகமது மசூத்,பிலால், முபாரக் அலி, சகுபர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இந்த குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!