முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் சசிகலா மாலை அணிவித்து மரியாதை

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் சசிகலா மாலை அணிவித்து மரியாதை
X

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா, அக். 28,29,30 ஆகிய நாட்களில் கொண்டாடப்டுகிறது. நேற்று ஆன்மீக விழா கொண்டாட்டாப்பட்டது. அந்நிகழ்வில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்களின் தலைமையில், யாகசாலை பூஜையுடன் குருபூஜை விழா தொடங்கியது.
இன்று, அரசியல் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, தேவர் சிலைக்கு மலர் தூவி, மலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் முன்னாள் எம்எல்ஏ முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!