மழை பெய்ய வேண்டி 101 ஆடுகளை பலியிட்டு வினோத வழிபாடு
கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில், 101-ஆடுகளை பலியிட்டு வினோத வழிபாடு நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில், ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் இரண்டாவது வாரத்தில், எல்லை பிடாரி அம்மன் கன்னிபெண் குலதெய்வத்திற்கு, ஆண்கள் மட்டுமே பங்கேற்று ஒன்று கூடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.கடந்த மூன்று தலைமுறை காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் இத்திருவிழா நேற்று நள்ளிரவில் துவங்கியது. விவசாய பணிகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள் இந்த ஆண்டும் முறையான பருவமழை பெய்து அதிக மகசூல் கிடைத்திடவும், விவசாயிகளை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க வேண்டி தொடர்ந்து நடைபெற்றது.
இந்த திருவிழா, பெண்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டு பகுதிக்கு சென்று அங்கு மண் பீடத்தில் எல்லை பிடாரி அம்மன் உருவத்தை வடிவமைத்து நள்ளிரவில் 101 கிடாய்களை பலியிட்டு கூட்டு வழிபாடு பூஜைகள் செய்யப்பட்டன. இன்று அதிகாலையில் பச்சரிசி சோறு சமைத்து அம்மனுக்கு படையலிட்டு பூஜையில் பங்கேற்ற ஆண்கள் அனைவருக்கும் பனை ஓலையில் அசைவ கறி விருந்து பிரசாதமாக பரிமாரப்படுகிறது. இதில் இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu