இராமநாதபுரத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மண்டல அளவிலான கருத்தரங்கம்
இராமநாதபுரத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மண்டல அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
இராமநாதபுரத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மண்டல அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
ராமநாதபுரம் புதிய பேரூந்து நிலையம் அருகே உள்ள வளர்ச்சித்துறை மகாலில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் ஓய்வூதிய திட்டம் தொடர்பான மண்டல அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் மு.முனீஸ்பிரபு வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பி.பிரெடரிக்ஏங்கல்ஸ் அரசு ஊழியர்களின் வாழ்வும், அரசின் நிலைப்பாடும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும், எஸ்.ராஜேஸ்வரன் கடந்த கால போராட்டங்களும் தேர்தல் வாக்குறுதிகளும் என்ற தலைப்பிலும், தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க சிவகங்கை மாவட்ட பொருளாளர் பி.சங்கர சுப்பிரமணியன் ஓய்வூதியம் அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும், தமிழ்நாடு வேலைவாய்ப்புத்துறை ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் எஸ். கணேசமூர்த்தி சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களின அவல நிலை பற்றியும் கருத்துரையாற்றினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது. தற்போது அரசு தாமதிப்பதால் போராட்ட களத்தை முன்னெடுக்க உள்ளோம் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu