இராமேஸ்வரம்- செகந்தராபாத் இடையே முன்பதிவு சிறப்பு இரயில் இயக்கம்
பைல் படம்.
இராமேஸ்வரம் - செகந்தராபாத் இடையே வாராந்திர முன்பதிவு சிறப்பு இரயில் இயக்க தென் மத்திய இரயில்வே வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
செகந்திராபாத் - இராமேஸ்வரம் (வண்டி எண் 07685) வாராந்திர சிறப்பு இரயில் அக்.19 முதல் டிச.28 வரை செவ்வாய்க் கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து இரவு 9:25 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் அதிகாலை 3:10 மணிக்கு இராமேஸ்வரம் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் இராமேஸ்வரம் - செகந்திராபாத் (வண்டி எண் 07686) வாராந்திர சிறப்பு இரயில் அக். 21 முதல் டிச.30 வரை வியாழக்கிழமைகளில் இரவு 11:55 மணிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமைகளில் காலை 7:10 மணிக்கு செகந்திராபாத் சென்றடைகிறது.
இந்த இரயில்கள் நலகொண்டா, மிரியால்குடா, குண்டூர், தெனாலி, பாபட்லா, ஓங்கோல், நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய இரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
இந்த இரயில்களில் குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி 2, குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி 2, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி 10, இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி 5, சரக்கு மற்றும் காப்பாளர் பெட்டி 2 இணைக்கப்படுகிறது. இந்த இரயில்களில் பயணிக்க முன்பதிவு அவசியம் என இரயில்வே வாரிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu