இராமநாதபுரம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்: மாவட்ட ஆட்சியர் வெளியீடு

இராமநாதபுரம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்: மாவட்ட ஆட்சியர் வெளியீடு
X
இராமநாதபுரம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு. மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத் வெளியிட்டார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் வெளியிட்டார்.

இதில் இராமநாதபுரம், பரமக்குடி (தனி), முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய நான்கு தொகுதிகளில் 11 லட்சத்து.72 ஆயிரத்து 051 வாக்காளர்கள் உள்ளனர். இதில் புதியாக 14.951 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 4.759 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 5 லட்சத்து 82 ஆயிரத்து 17 ஆண், 5 லட்சத்து 89 ஆயிரத்து 966 பெண், மூன்றாம் பாலினத்தவர் 68 பேர் என 11 லட்சத்து 72 ஆயிரத்து 51 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்