இராமநாதபுரம் ஆட்சியரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

இராமநாதபுரம் ஆட்சியரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
X

முதுகுளத்தூர் அடுத்த புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் 200 பேர் ஆட்சியரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

முதுகுளத்தூர் அடுத்த புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் 200 பேர் ஆட்சியரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ராமநாதபுரம் ஆட்சியரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு கண்மாய் தண்ணீரை திறந்து விடாததால் தங்களது ஆயிரம் ஏக்கர் பயிர் அழிவதாக புகார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் 200 பேர் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த புஷ்பவனம் கிராமத்தினர் தங்களது கிராமத்திற்கு அடுத்துள்ள வளநாடு கிராமத்தினர் கண்மாய் மட்டத்திற்கு மேல் நீரைத் தேக்கி கண்மாய் நீரை வெளியேற விடாமல் தடுத்து வைத்திருப்பதால் தங்களது கிராமத்தின் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியதாகவும் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க உடனடியாக வளநாடு கண்மாயில் இருந்து தண்ணீரை ஆற்றுக்கு திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார். மாவட்ட ஆட்சியரை விவசாயிகள் முற்றுகையிட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai platform for business