இராமநாதபுரம் மாவட்ட பணிமனைகளில் அரசு பேருந்துகள் துாய்மைப்படுத்தும் பணி தீவிரம்

இராமநாதபுரம் மாவட்ட பணிமனைகளில் அரசு பேருந்துகள் துாய்மைப்படுத்தும் பணி தீவிரம்
X
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் பேருந்துகளை தூய்மை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதையடுத்து நாளை காலை முதல் தமிழக அரசு பல்வேறு கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, இராமேஸ்வரம், இராமநாதபுரம் உட்பட 6 இடங்களில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் மாவட்டங்களிலேயே இயக்கப்பட உள்ளது. இன்று காலை முதல் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் உள்ள பேருந்துகளை போக்குவரத்து ஊழியர்கள் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஓய்வில் உள்ள நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்களை உடனடியாக பணிக்கு திரும்புமாறு மேலாளர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து இன்று இரவே அதிகமான நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணிமனைக்கு வந்து தங்கி நாளை அதிகாலையில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்த பணிமனை மேலாளர்கள் தெரிவித்துள்ளனர்.



Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்