இராமநாதபுரத்தில் சதம் அடித்த பெட்ரோல் விலை -வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

இராமநாதபுரத்தில் சதம் அடித்த பெட்ரோல் விலை -வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
X
இராமநாதபுரத்தில் சதம் அடித்த பெட்ரோல் விலை. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.
இந்தியா முழுவதும் தினம் தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும் இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வரிகளால் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகின்றது. தமிழகத்தின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டுள்ளது. இதே போன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது.

இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.31 பைசா வாகவும், பவர் பெட்ரோல் ரூ.102.73பைசா வாகவும், 1 லிட்டர் டீசல் ரூ.94.31 பைசா வாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் சில மாதங்களுக்கு ஒரு முறை விலை உயர்த்தப்பட்;ட நிலையில் தற்போது தினம் தோறும் பைசா பைசா வாக விலை உயர்த்தி 1 லிட்டர் சதம் அடிக்கும் நிலைக்கு வந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!