பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி: பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஆய்வு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி:  பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஆய்வு
X

பசும்பொன் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத்.

கமுதி அருகே பசும்பொன்னில் பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் நேரில் ஆய்வு செய்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 114 -வது ஜெயந்தி விழாவும், 59 குருபூஜை விழாவும் வருகின்ற 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையடுத்து இன்று பசும்பொன் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத், காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உள்ளிட்டோர் பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து ஆய்வு நடத்தினார்.

இதில் வருவாய்த்துறை, சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு