கமுதி அருகே அடிப்படை வசதி இல்லாத ஊராட்சி: பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம்
கமுதி அருகே உள்ள பேரையூர் ஊராட்சியில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் சாலை.
கமுதி அருகே அடிப்படை வசதியில்லாத ஊராட்சி: பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம்.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் ஊராட்சிக்குட்பட்ட பீட்டர்புரம், அய்யனார்புரம், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவிதமான பலனும் இல்லை. இந்த பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, தெருவில் மின் விளக்கு வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பீட்டர்புரம் அருகே பேரையூர் அரசு மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளி, மகளிர் விடுதி ஆகியவை செயல்பட்டு வருகிறது.
இந்த சாலையை நூற்றுக்கும் மேற்பட்டோர் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தரைப்பாலம் சேதமடைந்து சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் இரவு நேரங்களில் சாலையை கடக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதியில் மழை பெய்தால் தண்ணீர் செல்வதற்கு வாறுகால் வசதியில்லாததால் தெருக்களில் குளம் போல் காட்சி அளிப்பதாலும் டெங்கு, காலரா, மலேரியா போன்ற தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் நேரங்களில் இப்பகுதியில் மின் விளக்கும் இல்லாமலும் அந்த சாலையை பயன்படுத்துவதால் பாம்பு மற்றும் விஷபூச்சிகளுக்கு பயந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. உடனடினாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu