பனம்பழம் மூலம் உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம்

பனம்பழம் மூலம் உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம்
X

பனம்பழத்தை பயன்படுத்தி, உணவுப் பொருட்களையும் மருந்து பொருட்களையும் தயாரிப்பதற்கான பயிற்சி பட்டறை இராமநாதபுரத்தில் நடைபெற்றது.

பனம் பழத்தை பயன்படுத்தி உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி பட்டறை, இராமநாதபுரத்தில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மன்னர் சேதுபதி பனைத்தொழில் கல்லூரி மற்றும் சுதேசி பனை ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து, பனம் பழ உணவுகள் குறித்த பயிற்சி பட்டறையை நடத்தின.

இந்த பயிற்சி முகாமில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் இருக்கக்கூடிய பனை மரங்களை பயன்படுத்தி பனம்பழ சாக்லேட், பனம்பழ அல்வா, பணியாரம், லட்டு போன்றவற்றை தயாரிப்பது குறித்தும் வர்த்தக ரீதியில் அவற்றை கொண்டு செல்வது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பயிற்சி பட்டறையை இராமநாதபுரம் சேதுபதி மன்னர் குமரன் சேதுபதி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மன்னர் சேதுபதி பனைத்தொழில் கல்லூரி சார்பில், அடுத்த ஆண்டு தேசிய அளவிலான பனைத்தொழில் குறித்த மாநாடு நடைபெறும் என்றும் இதில் பல்வேறு மாநில முதல்வர்களும் வெளிநாடு வாழ் தமிழர்களும் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil