இராமநாதபுரம் கீழக்கரை நகர் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

இராமநாதபுரம் கீழக்கரை நகர் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு
X

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் பகுதியில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் பகுதியில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் பகுதியில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகர் 4 வது வார்டு கிழக்கு தெரு ( அன்னாப்பா கடை சந்து ) பகுதியில் ஏர்டெல் கம்பெனியின் செல்போன் டவர் அமைக்க இன்று ஆட்கள் வந்து காங்கீரிட் பணிகளுக்கான வேலையை ஆரம்பம் செய்ய முற்பட்டனர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சாகுல் ஹமீது கூறுகையில்: இப்பகுதி குடியிருப்பு நிறைந்த முக்கியமான பகுதியாக விளங்குகிறது. செல்போன் டவர் கீழே இருந்து ஆரம்பிப்பதால் பொதுமக்களுக்கு குறிப்பாக கர்பிணி பெண்களுக்கு கதிர் வீச்சு போன்ற ஏதாவது பாதிப்பு உள்ளாகும் என பொதுமக்கள் கருதுவதால் இங்கு செல்போன் டவர் அமைப்பதை விரும்பவில்லை. காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்துள்ளோம். இரண்டொரு நாளில் முறையாக அரசு அலுவலகங்களில் புகார் மனு அளித்த பின், நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்க உள்ளோம் என்றார்.

Tags

Next Story