கண்மாயில் தேக்கிய தண்ணீரை திறந்துவிட்ட அதிகாரிகள்: பொதுமக்கள் முற்றுகை

கண்மாயில் தேக்கிய தண்ணீரை திறந்துவிட்ட அதிகாரிகள்: பொதுமக்கள் முற்றுகை
X

வளநாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

வளநாடு கண்மாயில் தேக்கிய தண்ணீரை திறந்து விட்ட அதிகாரிகள். ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்.

ராமநாதபுரத்தை அடுத்த வளநாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நடந்து தங்களது கிராமத்து கண்மாயில் தேக்கி வைத்த தண்ணீரை திறந்து விட்டதாக கூறி புகார்.

ராமநாதபுரம் மாவட்டம் வளநாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டு நடந்து கொண்டு தாங்கள் கண்மாயில் தேக்கி வைத்திருந்த மழைநீரை திறந்துவிட்டதாக புகார் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள வளநாடு, செங்கப்படை, தெய்வதானம், இந்திராநகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அங்குள்ள கண்மாய் நீரை பயன்படுத்தி 2500 ஏக்கர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் புஷ்பவனம் கிராம பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் கண்மாயில் உள்ள தண்ணீரை திறந்து விட்டதாக கூறி அதனால் தங்களுடைய விவசாயம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி 4 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு தங்களது பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!