முதுகுளத்தூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது. 203 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.

முதுகுளத்தூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர்
முதுகுளத்தூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 203 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. இந்த சூழலில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதிகளில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராகவேந்திரா ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் கதிர்வேல் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது முதுகுளத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே கிழக்கு தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்றுக் கொண்டிருந்த, பரமக்குடியை சேர்ந்த சிவராமன், பாபு, சரவணன், ராம்பாபு மற்றும் கீழக்குளத்தை சேர்ந்த முத்தமிழ்ச்செல்வன் உட்பட ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். விற்பனைக்காக அவர்கள் வைத்திருந்த 203 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய புகையிலைப் பொருட்களை கடைகளில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதுகுளத்தூர் டிஎஸ்பி ராகவேந்திரா ரவி எச்சரித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu