முதுகுளத்தூர்: ரூ.40லட்சத்தில் அமைக்கப்பட்ட தார்சாலை மூன்றே மாதங்களில் சேதம்

முதுகுளத்தூர்: ரூ.40லட்சத்தில் அமைக்கப்பட்ட தார்சாலை மூன்றே மாதங்களில் சேதம்
X
முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை மூன்றே மாதங்களில் சேதம்

முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை மூன்றே மாதங்களில் சேதமடைந்தது குறித்து விசாரித்து இதற்கு காரணமானவர்கள் மீது தொடர்புடைய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேரூராட்சி கமுதி செல்லும் பிரதான சாலையில் இருந்து சுந்தரபாண்டி ஊருணி வரை ரூ.40 லட்சம் செலவில் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டன. இந்த சாலை அமைத்த மூன்றே மாதங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாலை தரமில்லாமல் அமைத்ததால் சேதம் அடைந்து விட்டதாகவும், மீண்டும் தார் சாலையை தரமாக அமைக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சாலைப் பணி முடிக்கப்பட்டு திட்டச்செலவு தொகை எவ்வளவு என்ற விவரம் குறிப்பிட்டு பொதுமக்கள் பார்வைக்காக சாலையோரம் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையும் அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மாலதியிடம் கேட்டபோது சேதமான தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture