சொத்துக்காக பாட்டியை கொலை செய்து பேரன் தப்பி ஓட்டம்

சொத்துக்காக பாட்டியை கொலை செய்து பேரன் தப்பி ஓட்டம்
X
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில், சொத்துக்காக பாட்டியை கொலை செய்து பேரன் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மாரியூர் வடக்கு தெருவில் வசித்து வருபவர் மாரியம்மாள் (75). இவரது மகன் மலையப்பன், தூத்துக்குடியில் வசித்து வருகிறார். மலையப்பன் மகன் மணிபாரதி (25) சொத்து பிரச்சினை தொடர்பாக பாட்டி வீட்டுக்கு வந்து, இன்று அதிகாலை தனது பாட்டியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே மாரியம்மாள் உயிரிழந்தார். மணிபாரதி தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த சாயல்குடி போலீசார் விசாரணை செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பு வைத்தனர். மேலும் தப்பி ஓடிய மணிபாரதியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story