இராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய மின்மாற்றிகளை அமைச்சர் தொடங்கிவைப்பு
இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக 12 புதிய மின்மாற்றிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் தலைமை வகித்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி முன்னிலை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்) முருகேசன் (பரமக்குடி) உட்படபலர் பங்கேற்றார்கள்.
விழாவில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் பொதுமக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பிறமாநிலங்களில் முதல்வர்;களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கிடும் வகையில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
நல்லாட்சியையும், செயல் திட்டங்களை அங்கீகரிக்கும் விதமாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் சிறப்பான வெற்றியை வழங்கியுள்ளார்கள். இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்திட ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தளபதியார்; உத்தரவின் பேரில், சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் கடல்நீரை குடிநீராக்கும்; மற்றும் குதிரை மொழிகிராமத்தில் 60 எம்.எல்.டி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதுகுளத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புறவழிச்சாலை பணிகள் துரிதப்படுத்தப்படும்.
மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை மேம்பபடுத்திடும் வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu