இராமநாதபுரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் பொறுப்பேற்பு

இராமநாதபுரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் பொறுப்பேற்பு
X

இராமநாதபுரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞராக கார்த்திகேயன் பதவி ஏற்றார்.

இராமநாதபுரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞராக கார்த்திகேயன் பதவி ஏற்றார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களுக்கும் அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற அரசு குற்றவியல் வழக்கறிஞராக கார்த்திகேயன், கூடுதல் மாவட்ட நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராக மனோகரன், விரைவு நீதிமன்ற மகிளா நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞராக கீதா, இராமநாதபுரம் சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராக கேசவன், பரமக்குடி சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராக தமிழ் மாறன், முதுகுளத்தூர் சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராக முனியசாமி, இராமநாதபுரம் சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராக (நிலம் கையகப்படுத்தல்) தமிழரசன், மாவட்ட முன்சீப் நீதிமன்ற (இராமநாதபுரம்) அரசு வழக்கறிஞராக செந்தில்குமார், மாவட்ட முன்சீப் நீதிமன்ற (பரமக்குடி) அரசு வழக்கறிஞராக ஜான் ராஜதுரை, மாவட்ட முன்சீப் நீதிமன்ற (முதுகுளத்தூர்) அரசு வழக்கறிஞராக சரவணன், மனித உரிமை மாவட்ட சிறப்பு வழக்கறிஞராக சபரிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற அரசு குற்றவியல் வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்ட திருவாடானை கார்த்திகேயன் பொறுப்பேற்றார். இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முறைப்படி பொறுப்பேற்றார். மூத்த வழக்கறிஞர்கள் சிவராமன், கண்ணன், குணசேகரன், திருவாடானை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தனபாலன், இராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ரவிசந்திர ராமவன்னி, இராமநாதபுரம் ஒன்றிய பெருந்தலைவரும் வழக்கறிஞர் பிரபாகரன், உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றவுடன் முதன்மை மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags

Next Story