பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருவுருவ சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பு
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி விழாவும் , 59வது குருபூஜை விழாவும் வருகின்ற அக்டோபர் 30 தேதியில் நடைபெற உள்ளது. அக்டோபர் 28 ஆன்மீக விழாவும், 29 அரசியல் விழாவும், 30 அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்கள் 13.7 கிலோ எடைகொண்ட தங்கத்தாலான கவசத்தை வழங்கினார். கவசமானது ஆண்டுதோறும் அக்டோபர் 25ம் தேதி மதுரையில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்திலிருந்து அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் எடுத்து தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
அக்கவசமானது பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு எடுத்துவரப்பட்டு தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அவர்கள் அணிவித்தார். உடன் அதிமுக மாவட்ட கழக செயலாளர் முனியசாமி, பரமக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன், கமுதி ஒன்றிய செயலாளர் காளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu