கமுதி அருகே விளைநிலத்தில் வைத்த விஷத்தை சாப்பிட்ட 8 வளர்ப்பு ஆடுகள் பலி: போலீசார் விசாரணை

கமுதி அருகே விளைநிலத்தில் வைத்த விஷத்தை சாப்பிட்ட 8 வளர்ப்பு ஆடுகள் பலி: போலீசார் விசாரணை
X
கமுதி அருகே விளைநிலத்தில் வைத்த விஷத்தை சாப்பிட்ட 8 வளர்ப்பு ஆடுகள் பலி, கமுதி போலீசார் விசாரணை.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் வரதராஜன். இவர் தனக்கு சொந்தமான 8 வளர்ப்பு வெள்ளாடுகளை அங்குள்ள வயல்காட்டில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற எட்டு ஆடுகளும் ஒரே நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து கமுதி காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் ஆடுகளுக்கு விஷம் வைத்துக் கொன்று இருக்கலாம் என்று புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த ஆடுகளை உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இறந்த ஆடுகளின் மதிப்பு ஒன்றரை லட்ச ரூபாய் ஆகும். ராமசாமிபட்டி கிராமத்தில் விவசாயி ஒருவரின் ஆடு விஷம் தின்று இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story