பள்ளி மாணவியை காரில் கடத்த முயன்ற 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

பள்ளி மாணவியை காரில் கடத்த முயன்ற 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
X

பைல் படம்.

முதுகுளத்தூர் அருகே 17 வயது பள்ளி மாணவியை காரில் கடத்த முயன்ற 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள (காக்கூர்)ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைன் வகுப்பில் படித்த போது அவரது தோழி மூலம் மதுரையில் உள்ள சதீஷ்(27) என்பவர் அறிமுகம் கிடைத்தது. பின்பு இருவரும் செல்பேசியில் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அப்பெண்ணின் தந்தை கண்டித்து செல்போனை பறித்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் காதல் வயப்பட்ட 17 வயது மாணவியை மதுரை - கீழ் மதுரை அரிஜன் காலாணி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ்குமார் (27) என்பவர் காதலிப்பதாக கூறி முதுகுளத்தூர் அருகே உள்ள அவரது கிராமத்திற்கு வந்து ஆசை வார்த்தை கூறி காரில் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததின் அதன் அடிப்படையில் கீழ் மதுரை பகுதியை சேர்ந்த பால்ராஜ் மகன் மணிபாரதி (30), முத்துராஜ் மகன் பிரபு (20), பிச்சைமுத்து மகன் அஜித்குமார் உட்பட 4 பேர் மீது முதுகுளத்தூர் போலீசார் போக்சோ மற்றும் சிறுமியை காரில் கடத்தி சென்ற உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future