/* */

முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி: வாடி வாசல் அமைக்கும் பணி தொடங்கியது

இராமநாதபுரத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வாடிவாசல் அமைக்கும் பணி தொடங்கியது

HIGHLIGHTS

முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி: வாடி வாசல் அமைக்கும் பணி தொடங்கியது
X

இராமநாதபுரம் மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பொக்காரனேந்தல் கிராமத்தில்  நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு வாடிவாசல் அமைக்கும் பணி

இராமநாதபுரத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி. வாடி வாசல் அமைக்கும் பணி தொடங்கியது.

இராமநாதபுரத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு வருகிற மே 25-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான வாடிவாசல் அமைக்கும் பணியை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பொக்காரனேந்தல் கிராமத்தில் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு சமத்துவ ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இதில் தமிழகத்திலுள்ள முக்கியமான நகரங்களில் இருந்து தலைசிறந்த 800 காளைகள் பங்கேற்க இருக்கிறது. 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பிரம்மாண்ட மைதானம் தேர்வு செய்யப்பட்டு இன்று வாடிவாசல் அமைக்கும் பணி துவங்கி வைக்கப்பட்டது. வாடிவாசல் அமைக்கும் பணியை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 May 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு