தேவர் குருபூஜையையொட்டி போலீசாரின் வாகனத்தில் ஏறி குத்தாட்டம் போட்ட 5 பேர் கைது
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையின் போது போலீசாரின் வாகனத்தின் மீது ஏறி நின்று குத்தாட்டம் போட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் கைது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையின் போது போலீசாரின் வாகனத்தின் மீது ஏறி நின்று குத்தாட்டம் போட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் கைது.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் கடந்த 30ஆம் தேதி முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி விழா மற்றும் 59வது குருபூஜை விழா நடைபெற்றது. அப்போது பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் கமுதியில் குருபூஜை விழாவில் கலந்து கொண்டு சென்ற இளைஞர்கள் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை வாகனத்தின் மீதும், வட்டார வளர்ச்சி அலுவலரின் காரின் மீதும் ஏறி குத்தாட்டம் போட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று இளைஞர்கள் ஆடிய சம்பவம் தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாக இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருத்தார்.
மேலும் புகார் பெற்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பான விசாரணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரின் வாகனத்தின் மீது ஏறி நின்று குத்தாட்டம் போட்ட உலக நடையைச் சேர்ந்த காளீஸ்வரன், செங்கப்படையைச் சேர்ந்த ரஞ்சித்குமார், உடப்பங்குளத்தை சேர்ந்த வாசு, கோட்டைமேடு பகுதியை சேர்ந்த அஜய்குமார் மற்றும் கருப்புசாமி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu