முதுகுளத்தூர் அருகே உரம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

முதுகுளத்தூர் அருகே உரம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
X
முதுகுளத்தூர் அருகே உரம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல். வங்கியை முற்றுகையிட்டாதல் பரபரப்பு.

முதுகுளத்தூர் அருகே உரம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல். வங்கியை முற்றுகையிட்டாதல் பரபரப்பு.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் விவசாயிகள் மானாவாரி பயிராக நெற்பயிரை கடந்த 2 மாதத்துக்கு முன்பு விதைப்பு செய்தனர். தற்போது நெல் பயிர் ஓரளவு நன்றாக வளர்ந்த நிலையில் அதற்கு தேவையான உரம் இட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் திருவரங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு முறையாக உரம் வழங்காமல் பதிக்கி வைத்திருப்பதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் இன்று கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு பரமக்குடி- முதுகுளத்தூர் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இறுதியாக கீழத்தூவல் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் கடன்காரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உரம் வழங்கப்படும் என உறுதி அளித்ததின் அடிப்படையில் விவசாயிகளும், பொதுமக்களும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, முதுகுளத்தூர் அருகே உள்ள அலங்கானூர், செங்கப்படை, சிறுதலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரம் வழங்காமல் திருவரங்கம் சொசைட்டிக்கு மட்டும் அதிக அளவிலான உரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் விவசாயிகளுக்கு உரங்கள் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறுகின்றனர்.

மேலும் திருவரங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றும் வங்கியின் செயலாளர் விவசாயிகளையும், பொதுமக்களையும் ஒருமையில் அநாகரிகமாக பேசுவதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். தற்போது விவசாய வேலைகளை விட்டுவிட்டு உரம் வாங்குவதற்காக நாள் முழுவதும் காத்து கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். உரம் வழங்காததால் திருவரங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் மற்றும் போலீசாரிடமும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!