திருஉத்திரகோசமங்கையில் மரகதகல் நடராஜரின் சந்தனக்காப்பு களைத்து அபிஷேகம்
பைல் படம்
திருஉத்திரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மரகத கல்லால் ஆன நடராஜரின் சந்தனக்காப்பு களையப்பட்டு அபிஷேகம்.
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோச மங்கை உலகில் முதல் முதலில் உருவான பகுதி என்று புராணங்கள் கூறுகிறது ஸ்ரீராமபிரானின் மூதாதையர்களால் உருவாக்கப்பட்ட கோவில் இது என்று கூறப்படுகிறது மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற தலம் இது. இந்த கோவிலில் விலைமதிப்பற்ற மரகதக்கல்லால் ஆன ஆளுயர ஆடும் திருக்கோலத்தில் ஆன நடராஜர் சிலை உள்ளது இந்த சிலை விலைமதிப்பற்ற மரகதக்கல்லால் ஆனது என்பதாலும் மரகத கல் ஒலி அதிர்வுகளை தாங்காமல் உடைந்து விடும் என்பதால் அந்த சிலையை வருடம் முழுவதும் சந்தனம் பூசி காத்து வருகிறார்கள். வருடத்திற்கு ஒருநாள் அதாவது ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் மட்டும்தான் நடராஜர் சிலையின் மீதுள்ள சந்தனகாப்பு அகற்றப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
பிறகு மறுநாள் ஆருத்ரா தரிசனத்தன்று சந்தனகாப்பு மீண்டும் பூசப்பட்டு விடும் அதற்குப் பிறகு அடுத்த வருடம்தான் அந்த சந்தனக்காப்பு அகற்றப்படும் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனம் நாளை கொண்டாட படுவதால் இன்று மரகத நடராசரின் சந்தனக்காப்பு அகற்றப்பட்டது . இன்று பால் தயிர் சந்தனம் மஞ்சள் போன்ற 32 வகையான அபிஷேகம் நடைபெற்றது இன்று பகல் முழுவதும் இரவு முழுவதும் இதுபோன்ற அபிஷேகங்கள் நடைபெறும் அதற்குப்பின்னர் நாளை காலை ஆருத்ராதரிசன பூஜைக்கு பிறகு மீண்டும சந்தனக்காப்பு அணிவிக்கப்படும் கொரோனா பரவல் காரணமாக வெளியூர் வெளி மாவட்ட வெளி மாநில பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த போதிலும் ஏராளமானோர் இந்த தரிசனத்தை காண காலையிலிருந்து குவிந்து வருகின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu