கடலாடி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

கடலாடி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்
X

பைல் படம்.

கடலாடி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு இரு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றுது.

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள தனியன்கூட்டம் கிராம வனபேச்சி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இரு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது.

இதில் சின்ன மாடு பெரிய மாடு என 28 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரியமாடு பந்தயத்தில் 9 மாட்டு வண்டிகளுக்கு 10 கிலோமீட்டர் தூரம் இலக்கும், சின்ன மாடு பந்தயத்தில் 19 மாட்டு வண்டிகளும் சின்ன மாடு பந்தயத்திற்கு ஆறு கிலோமீட்டர் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்த மாடுகளுக்கும் சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

இந்த மாட்டு வண்டி போட்டியை காண கடலாடி, முதுகுளத்தூர் மற்றும் சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்து கண்டு ரசித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!