கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரம்: சிசிடிவி காட்சியை வெளியிட்டது காவல்துறை
முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த கல்லூரி மாணவர் மணிகண்டனை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் கல்லூரி மாணவன் மணிகண்டன் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த போலீஸார் அவரை பின்தொடர்ந்து சென்று பிடித்து காவல் நிலையத்தில் விசாரணைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நீர்கோழினேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மணிகண்டன் போலீசார் விசாரணைக்கு பின்னர் வீடு திரும்பிய நிலையில் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து போலீஸார் அடித்துக் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
மேலும் போலீசார் தரப்பில் இருந்து பாம்பு கடித்து இறந்ததாக விளக்கம் அளித்துள்ள நிலையில் அதை ஏற்க மறுத்த உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற கல்லூரி மாணவன் மணிகண்டன் உயிரிழந்ததை அடுத்து அவரது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் நேற்று முதுகுளத்தூர்- பரமக்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திருமலை மற்றும் முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப் பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சந்தேக மரணம் 174 வழக்கு பதிவு செய்யப்பட்டு உயிரிழந்த கல்லூரி மாணவன் மணிகண்டனின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு உடலை வாங்காமல் கிராமத்திற்கு நேற்று திரும்பி சென்று விட்டனர்.
இதையடுத்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கான குளிர்சாதனப்பெட்டி இல்லாததால் உயிரிழந்த கல்லூரி மாணவர் மணிகண்டனை உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போலீசார் அடித்து உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையத்தில் நடந்த சிசிடிவி காட்சிகளை தற்போது விடப்பட்டுள்ளனர். அதில் கல்லூரி மாணவன் மணிகண்டனை போலீசார் யாரும் தாக்கியதாக காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu