வட்டாட்சியர் அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்ட குடிமகன்: வலைதளங்களில் வீடியாே வைரல்

வட்டாட்சியர் அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்ட குடிமகன்: வலைதளங்களில் வீடியாே வைரல்
X

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்ட குடிமகன். சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ.

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்ட குடிமகன். சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரைகுறை ஆடைகளுடன் சென்ற குடிமகன் ஒருவர் நான்தான் இந்த ஊருக்கு எம்எல்ஏ, கண்ணப்பன் இல்லை, அவர் ஆடு மேய்ப்பவர் என கூறினார்.

மேலும் அந்த குடிமகன் வருவாய்துறை அதிகாரிகளிடம் கலெக்டர் யார் எனவும் ஒழுங்கா வேலை செய்யுங்கள் இல்லை செருப்பால அடிப்பேன் என ஆவேசமாக பேசினான்.

இதனால் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றிய வருவாய்த்துறை அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள், பெண் ஊழியர்கள் அச்சமடைந்தனர். இந்த வீடியோ காட்சி தற்போது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த குடிகார ஆசாமியின் பெயர் பாஸ்கரன் என்றும் இவர் முதுகுளத்தூர் அதிமுகவின் நகரச் செயலாளர் சங்கரபாண்டியன் என்பவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. முதுகுளத்தூர் போலீசார் தாலுகா அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!