தேவர் குருபூஜை பசும்பொன்னில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

தேவர் குருபூஜை  பசும்பொன்னில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
X

பசும்பொன் கிராமத்தில் நடைபெற்ற  குருபூஜையில் பசும்பொன் தேவர் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின், ஊரக வளர்ச்சித்துறைஅமைச்சர் பெரியகருப்பன், கல்விஅமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா, ஜெயந்தி விழா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், மலர்வளையம் வைத்தும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் பிள்ளையார்பட்டி பிச்சைக் குருக்களின் யாகசாலை பூஜையுடன் முத்துராமலிங்கத்தேவரின் 114வது ஜெயந்தி விழா மற்றும் 59 குருபூஜை விழாவை நேற்று முன்தினம் தொடங்கியது. இதையடுத்து இன்று திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள் திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story