முதுகுளத்தூர் அருகே விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர் உயிரிழப்பு
கல்லூரி மாணவர் மணிகண்டன்.
முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற இளைஞர் இறப்பு: போலீசார் அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் உடன் வந்த நபர்கள் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் கல்லூரி மாணவன் மணிகண்டன் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த போலீசார் அவரை பின்தொடர்ந்து சென்று பிடித்து வந்து காவல் நிலையத்தில் விசாரணைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நீர்கோழினேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மணிகண்டன் போலீசார் விசாரணைக்கு பின்னர் வீடு திரும்பிய நிலையில் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதை எடுத்து போலீசார் அடித்துக் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டுகின்றனர். மேலும் போலீசார் தரப்பில் இருந்து பாம்பு கடித்து இறந்ததாக விளக்கம் அளித்துள்ள நிலையில் அதை ஏற்க மறுத்த உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நேற்று வாகன சோதனையின்போது மணிகண்டன் நிற்காததால் போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்து கீழத்தூவல் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அவரது தாயார் ராமலட்சுமிக்கு போலீசார் தகவல் கொடுத்ததின் பேரில் இறந்த மணிகண்டனின் தாயார் ராமலட்சுமி மற்றும் அவரது சகோதரர் அலெக்ஸ் பாண்டியன் ஆகிய 2 பேரும் கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு நேற்று வரவழைக்கப்பட்டு அவர்களிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். பின்பு அவரது சொந்த ஊரான நீர்க்கோழியேந்தல் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இரவில் தூங்கிக் கிடந்த மணிகண்டன் மர்மமான முறையில் நள்ளிரவில் 3 மணி அளவில் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இறந்த இளைஞரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக முதுகுளத்தூர் டிஎஸ்பி ஜான் பிரிட்டோ, மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு டிஎஸ்பி திருமலை ஆகியோர் சம்பவ இடத்தில் உள்ளனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மர்மமான முறையில் இறந்த மணிகண்டனின் உறவினர்கள் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அதனடிப்படையில் துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை உரிய எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu