இராமநாதபுரம் அருகே படகில் இருந்து தவறி கடலில் விழுந்த பாஜக நிர்வாகி பலி

இராமநாதபுரம் அருகே படகில் இருந்து தவறி கடலில்  விழுந்த பாஜக நிர்வாகி பலி
X
உச்சிப்புளி அருகே நண்பர்களுடன் கடலுக்குச் சென்ற பாஜக நிர்வாகி படகில் இருந்து தவறி விழுந்து பலியானார்.

உச்சிப்புளி அருகே நண்பர்களுடன் கடலுக்குச் சென்ற பாஜக நிர்வாகி படகில் இருந்து தவறி விழுந்து பலியானார்.

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே புதுநகரத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் தயாநிதி (32). எம்பிஏ பட்டதாரி. பாஜக நிர்வாகியான இவர் நேற்று முன் இரவு இவர் தனது நண்பர்களுடன் உச்சிப்புளி அருகே அலைகாத்தான்வலசை கடல் பகுதியில் இருந்து படகில் கடலுக்கு சென்றார். படகில் இருந்தவாறு சிறுநீர் கழிக்க முயன்றார்.

அப்போது நிலைதடுமாறி கடலில் தவறி விழுந்தார். அவருடன் சென்ற நண்பர்கள் அவரை துரிதமாக மீட்டு உச்சிப்புளி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தனர். இது குறித்து தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!