கமுதி பேரூராட்சியில் பாஜக வேட்பாளர் உட்பட 11பேர் போட்டியின்றி தேர்வு

கமுதி பேரூராட்சியில் பாஜக வேட்பாளர் உட்பட 11பேர் போட்டியின்றி தேர்வு
X

14-வது வார்டு வேட்பாளராக போட்டியிட்ட பாஜக கட்சியை சேர்ந்த சத்யாஜோதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கமுதி பேரூராட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர் உட்பட 11பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் ஏராளமான வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் இன்று பாஜக வேட்பாளர் உட்பட 11 பேர் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளனர். இதில் 14-வது வார்டு வேட்பாளராக போட்டியிட்ட பாஜக கட்சியை சேர்ந்த சத்யாஜோதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் சுயேட்சை வேட்பாளர்கள் 1-வது வார்டு மீனாட்சி, 4-வது வார்டு தேவிசதீஷ்குமார், 5-வது வார்டு உத்தண்ட சுரேஷ், 7-வது வார்டு அப்துல் வகாப் சகாராணி, 8-வது வார்டு கனிமலர் முத்துக்குமார், 10-வது வார்டு அந்தோணி சவேரியார் அடிமை, 11-வது வார்டு ஷேக் முகம்மது, 12-வது வார்டு ஹமீது மீராள் கௌசர், 13-வது வார்டு சித்ராநாகராஜ், 15-வது வார்டு திருக்கம்மாள் ஆகியோர் போட்டியின்றி தேர்வு பெற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!