குழந்தை திருமணத்தை தடுக்க விழிப்புணர்வு வாகனம்; ஆட்சியர் துவக்கி வைப்பு
குழந்தைகள் திருமணம் தடுப்பு விழிப்புணர்வு வாகனத்தை துவக்கி வைக்கும் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா.
விழிப்புணர்வு வாகனத்தை துவக்கி வைத்து பேசிய ஆட்சியர் சந்திரகலா, இராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலனை பாதுகாத்திடும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக குழந்தைத் திருமணத்தை முற்றிலுமாக தடுத்திடும் வகையில் சமூகநலன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைந்து பணிகள் செயல்ப்படுத்தப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் கடந்த ஜூலை-2021 ல் மட்டும் 6 குழந்தைத் திருமணங்களும், கடந்த ஒராண்டில் மொத்தம் 30 குழந்தைத் திருமணங்களும் தடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருமணவயது பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் ஆகும். திருமணத்திற்கான வயது நிறைவடையாத ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குறிய குற்றம் ஆகும். குழந்தைத் திருமணங்களினால் சமந்தப்பட்ட குழந்தைகள் உடல் ரீரியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
இத்தகைய சூழ்நிலைகள் ஏற்படாத வகையில் குழந்தைத் திருமணங்களை முற்றிலுமாக தடுத்திட பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். குழந்தைத் திருமணங்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக விளம்பர வாகனம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாகனத்தின் மூலம் மாவட்டத்தில் முக்கியப் பகுதிகளில் குழந்தைத் திருமணம் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்பாடல் மூலமாகவும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வுபணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைத் திருமணம் தொடர்பான புகார் மற்றும் தகவல்களை 04567 – 231098, 1098 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu