திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரின் சேவைகளை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரின் சேவைகளை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரின் சேவைகளை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்தவர் பைரோஸ்கான். இவர் அப்பகுதியில் பல்வேறு பொதுநல சேவைகள் செய்து வந்தார். இவரின் சேவைகளை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பெரியபட்டினம் மீனவர் கிராமத்தில் மீனவர் கூட்டுறவு சங்கம் இல்லாத நேரத்தில் மீனவர்கள் நலன் கருதி பெரியபட்டினம் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கம் அமைத்து கொடுத்தது, ஏழை எளிய குடும்பத்தில் இருக்கும் பெண்கள் திருமண நிதியுதவியை நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு பெற்றுக் கொடுக்க வழிவகை செய்வது. ஏழை, எளிய குடும்பத்தில் இருக்கும் பெண்கள் இரு பெண் குழந்தை திட்டத்தின் கீழ் அரசு நிதியுதவி பெற்றுக்கொடுக்க வழிவகை செய்வது, ஏழை எளிய குடும்பத்தில் இருக்கும் ஆண் வாரிசு இல்லாத 25-க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் பெற்றுக்கொடுக்க வழிவகை செய்வது, விதவைகளுக்கு விதவை ஓய்வூதியம் பெற்றுக்கொடுக்க வழிவகை செய்வது.
எளிய குடும்பத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் பெற்றுக்கொடுக்க வழிவகை செய்வது, புதிய குடும்ப அட்டை, இயற்கை மரணம் சிறுபான்மை மாணவ-மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசு வழங்கும் சிறுபான்மை கல்வி உதவித்தொகை மற்றும் மாணவியர்களுக்கு வழங்கும் மத்திய அரசின் அபுல் கலாம் ஆசாத் கல்வி உதவித்தொகை பெற வழிவகை செய்வது. கழிப்பறை இல்லா வீடுகளுக்கு மத்திய அரசு பாரத பிரதமரின் கழிப்பறை கட்டும் திட்டத்தில் கழிப்பறை கட்ட வழிவகை செய்வது என்பது உள்ளிட்ட அவரது பல்வேறு சமூக சேவைகளை பாராட்டி இந்த கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஊராட்சிக்கு வருகையில் அவருக்கு கிழக்கு மாவட்டத் தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான், கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் ஆகியோர் தலைமையில், மாவட்ட செயலாளர் முஹம்மது நஜீமுதீன், இராமநாதபுரம் மேற்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் அக்பர் அலி, மாவட்ட பொருளாளர் அசன் அலி,பெரியபட்டினம் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் புரோஸ்கான், இராமநாதபுரம் நகர் செயலாளர் ஜகுபர் சாதிக், நகர் செயற்குழு உறுப்பினர்கள் கோரி முஹம்மது,சகுபான், நகர் துணைத்தலைவர் அனீஸ்,பெரியபட்டினம் நகர் தலைவர் ரஜபுல்லா கான், செயலாளர் முகம்மது மீராசா உட்பட ஏராளமான SDPI கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து சிறப்பான முறையில் வரவேற்பளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu