இராமநாதபுரம் அருகே வீட்டில் கொள்ளை முயற்சி: மர்ம நபர்களுக்கு பாேலீசார் வலைவீச்சு

இராமநாதபுரம் அருகே வீட்டில் கொள்ளை முயற்சி: மர்ம நபர்களுக்கு பாேலீசார் வலைவீச்சு
X

ஏர்வாடி தர்காவில் கொள்ளை முயற்சி நடந்த வீட்டு உரிமையாளரிடம் மாவட்ட கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார்.

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிதர்காவில் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி.

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிதர்காவில் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி.

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா மேற்கு வாசல் பகுதியில் வசிப்பவர் ஆலம். இரவு வீட்டை பூட்டிவிட்டு தூங்கியபோது 3 மர்ம நபர்கள் கை க்ளோஸ், ஹெல்மெட் அணிந்து வந்து வீட்டில் இருந்த 6 சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டு கொள்ளை அடிக்க முயன்றனர். அப்போது சென்சார் லைட் வெளிச்சம் வந்ததும் வீட்டிலுள்ளவர்கள் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்தபோது 3 மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

இது சம்பந்தமாக ஏர்வாடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து மோப்ப நாய் ரோமியோவுடன் வந்த போலீசார் அங்கு விசாரணை நடத்தினர். அப்போது மோப்ப நாய் மர்மநபர்கள் தப்பி சென்ற வழியாக ஓடி சென்று நின்றது. இதனையுயடுத்து தடய அறிவியல் நிபுணர், சைபர் கிரைம் போலீசார் கொள்ளையடிக்க முயன்ற வீட்டை சோதனை செய்தனர்.

இந்நிலையில் இன்று மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்து வீட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டார். ஆலம் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏர்வாடிதர்கா போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!